ஸ்ரீ மகா கணபதி
பல்லவி
மனம் கனிந்தருள்வாய் மகாகணபதியே
உனதிரு பதமே கதியெனத் துதித்தேன்
அனுபல்லவி
அனங்கனும் நாணும் அழகுடையவனே
வினையிடர் தீர்க்கும் வேழமுகத்தோனே
சரணம்
தினகரகுலத்தோன் கேசவன் மருகனே
அனலேந்தும் முக்கண்ணன் மகனே கரிமுகனே
வனவிலங்கெனத் திரியும் புலன்களை அடக்கிட
உனையன்றி துணையெனக்கு வேறெவருள்ளார்
No comments:
Post a Comment