கபாலியின் தேர் வலம்
பல்லவி
தேரேறி பவனி வரும் கபாலீச்வரனை
ஆர்வமுடன் வணங்கி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பாரோர் புகழ்ந்தேத்தும் கயிலாய வாசனை
ஆராவமுதன் கேசவன் நேசனை
சரணம்
கார்குழல் மகளிர் நடனம் ஆடி வர
நேர் நின்று வேதியர் வேதங்கள் ஓதிட
ஊர் போற்றும் கலைஞர்கள் நாதஸ்வரம் முழங்க
பார்க்குமடியார்கள் பரவசத்திலாட ( தேரேறி ..)
கீர்த்தி மிகு ஓதுவார் திருவாசகம் ஓத
நேர்த்தியுடன் இசைவாணர் சங்கீதம் பாட
கார்மழைபோல் வானோர்கள் பூமாரிப் பொழிய
சீர்மல்கும் திருமயிலைத் திருத்தலத்தில் அருளோடு ( தே ..)
No comments:
Post a Comment