மாலோன்
தருமநெறி தழைக்க அவனியில் நீயெடுத்த
உருவங்கள் பல உண்டு ஆனாலும்
அருவமென்று சொல்லும் கூட்டமொன்றுண்டு
திருவென்னுமொரு மாதைத் திருமார்பில் வைத்திருக்கும்
பெருமை உனக்குண்டு கருமைநிறமுண்டு
அருமறைகள் கொண்டாடும் அருங்குணமுமுண்டு
திருசங்கும் சக்கரமும் கதையும் கையிலுண்டு
இருநான்கு திசையும் குருநாரதரும் பிரமனும்
கருடனும் அமரரும் சனகாதி முனிவரும் பணியும்
திருவடியும் உனக்குண்டு அடியார்கள் கூட்டமுண்டு
கருணைக் கடலென்ற பெயருமுண்டு நீயுறங்க
திருப்பாற்கடலுண்டு அதன் மீதோரரவணையுண்டு
திருமாலே கேசவனே இவையனைத்தும் ஆள்வோனே
திருமுகம் காட்டி எனை நீ காத்தருள எழுந்தருள்வதெப்போது
No comments:
Post a Comment