சங்கரன் மகன்
பல்லவிசங்கரன் மகனை கணபதியைத் துதித்தேன்
சங்கீத நாட்டியக் கலைகளை ரசிப்பவனை
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்த மங்கள மூர்த்தியை
பங்கயநாபன் கேசவன் மருகனை
சரணம்
அங்கமில் மன்மதனின் அழகினைவிடவும்
அங்க சௌந்தர்யம் நிறைந்தவனைக் கரிமுகனை
இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கையடக்கிடவும்
முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திடவும்
No comments:
Post a Comment