ஆனை முகன்
பல்லவி
பாதம் பணிந்தேன் கணபதியே எந்தன்
வேதனை வினைதீர்த்து காத்தருள்வாய்
அனுபல்லவி
யாதவ குலத்துதித்த கேசவன் மருகனே
மோதகக் கையனே விக்ன விநாயகனே
சரணம்
மாதவம் செய்திடும் முனிவரும் தேவரும்
வேத சாத்திர புராணங்களும் போற்றும்
நாத சங்கீத நாட்டிய ரசிகனே
மேதினி புகழ்ந்தேத்தும் ஆனைமுகத்தோனே
No comments:
Post a Comment