பாலகணபதி
பல்லவி
பாலும் பஞ்சாம்ருதமும் படைத்துனைத் துதித்தேன்
கோலமிகு கரிமுகனே நீயெனக்கருள்வாய்
அனுபல்லவி
வேலனுக்கு மூத்தோனே வினைகள் தீர்ப்பவனே
நீலவண்ணன் கேசவன் மருகனே
சரணம்
ஞாலம் தாய் தந்தையென்று உலகுக்குணர்த்திய
பால கணபதியே பரம தயாகரனே
நாலு வேதங்களும் சாத்திரமும் போற்றும்
நீலகண்டன் மைந்தனே ஐங்கரனே
No comments:
Post a Comment