மாயன்
தறிகெட்டோடும் நெறிகெட்ட மனத்தை
கடிவாளமிட்டுக் காத்தருளும் கண்ணனை
உறியிலுள்ள வெண்ணைதனை திருடித் தின்றவனை
பொறிவாயில் ஐந்தவித்தானை புகழ் சேர்
நெறி நின்ற நீர்வண்ணப் பெருமானை
அறிவுடைய அறவோர் போற்றுகின்ற உத்தமனை
எரிதழலேந்தும் முக்கண்ணன் நேசனை
விரி கமலமலரமர் நான்முகனை படைத்தவனை
கரிக்கபயம் தந்த கமலமலர் நாபனை
சரிநிகர் தனக்கொருவரில்லாத தேவனை
கரியவனைக் கார்மேக வண்ணனை மாயனை
பரிவோடு நமைக் காக்கும் கேசவனைப் பணிந்தேன்
No comments:
Post a Comment