Friday, 10 April 2015

தரிசனம்


    தரிசனம் 

கூடு ஓடாகிப் போனாலும் 
மனம் தேடித் தவிக்க 
ஆடு நனையுதென 
ஓநாய்கள் ஏங்க 
 ஏடும் எழுத்தாணியும் 
 தேய்ந்தழிந்து போக 
பாடிப் பரதேசியாய்
தேடித் திரிந்தேன் 
காடு மலையெல்லாம் 
ஓடிக்களைத்தேன் 
நாடித்துதிக்குமென் 
கண்களின் முன்னே 
தோடுடைய செவியனே 
நீ தோன்றும் நாளென்று !

No comments:

Post a Comment