இடையன்
மாடுகள் மேய்ப்பவனை ஆய்ப்படிச்சிறுவனை
காடுமலை மேடுகளில் குழலூதித் திரிபவனை
கூடிக் கோபியரின் மனம் குளிரச்செய்பவனை
ஒடோடிச்சென்று கரிக்கபயம் தந்தவனை
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் காதலனை
காளிங்கன் தலைமீது ஆடிக்களித்தவனை
வேடிக்கையாகப்பல அரக்கர்களை வதைத்தவனை
ஈடிணையில்லாத மாதவனைக் கேசவனை
பாடிப் பரவசித்து திருவடி பணிந்து
நாடித் துதித்தேன் நல்லருள் பெறவேண்டி
No comments:
Post a Comment