Thursday, 16 April 2015

ஆடவல்லான்


           ஆடவல்லான் 


     உடுக்கை டமரு தீச்சட்டியேந்தி 

      விரித்த சடையில் கங்கையைத் தாங்கி 

       நெற்றியில் நிலவும்  அனலும் வைத்து 

        பற்றிய சூலம் கைகளில் விளங்க 

        புலித்தோல் அழகுடன் அரைதனிலணிந்து 

         கால்களில்  தண்டைகள் ஒளியுடன் மின்ன 

          கேசவன் நான்முகன் நந்தி கணங்கள்  

           முனிவர்கள் தேவர்கள் அனைவரும் காண 

            ஈசன் ஆடும் கண்கொள்ளாக் காட்சியை 

            நெஞ்சில் நினைத்து மனம் களிப்படைந்தேன் 

            


        
         


       

No comments:

Post a Comment