தனிப்பெருங்கடவுள்
பல்லவி
தனிப் பெருங்கடவுளை கணபதியை துதித்தேன்
வினையிடர் துயரங்கள் அகன்றிட வேண்டுமென
துரிதம்
நரர்சுரர் நான்முகன் நந்தி கணங்கள்
சுரபதி ரதிபதி அனைவரும் போற்றும்
அனுபல்லவி
முனிவரும் தேவரும் மூவரும் யாவரும்
அனுதினம் வணங்கிடும் ஆனைமுகத்தோனை
சரணம்
வனிதையர் சித்தியும் புத்தியும் பணிந்திடும்
புனிதனைப் புண்ணிய மூர்த்தியைக் கரிமுகனை
இனிய குழலூதும் கேசவன் மருகனை
பனிமலை நாதன் பரமசிவன் மகனை
No comments:
Post a Comment