நாயகி
பல்லவி
நாயகியே நளின காந்திமதி - அரங்க
தாயுனையே பணிந்தேன் காத்தருள்வாய்
துரிதம்
நரர்சுரர் நாரதர் நான்முகனிந்திரன்
சுகசனகாதியர் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
ஆயர் குலத்துதித்த கேசவன் துணைவியே
தூய வெண்ணிலவின் சோதரியே மாயே
சரணம்
பாற்கடலில் அவதரித்த பரமகல்யாணி
தீய அரக்கரை மாய்த்திடும் அரங்கனின்
மணிமார்பில் வீற்றிருக்கும் தேவியும் நீயே
அரவமுனி நஹுஷனை அழித்தவள் நீயே
மாயா உலகை ஆள்பவளும் நீயே
மதனை ஈன்றவளே மறை போற்றும் அன்னையே
நேயமுடன் கலைமகளும் மலைமகளும் பணிந்தேத்தும்
தூயவளே திருமகளே துணை நீயே என்றும்