Friday, 23 December 2022

நாடுவீர்…..

 மார்கழி ஸ்பெஷல் ! #ஸ்ரீகாமாக்ஷி #அருட்பாவை 9:

பாடுவீர் பாடி பரவசத்தால் மெய்சிலிர்த்து 

ஆடுவீர் ஆடி அடங்கியுளம் பூரித்து 

தேடுவீர் தேடி திருவடியை நுஞ்சிரமேற்

சூடுவீர் சூடி சுமங்கலையை வேவியருள் 

நாடுவீர் நாடி நலம்பெறவே அன்பருடன்

கூடுவீர் கூடிநீர் பேரின்பங் கண்டீரேல் 

காடுமோர் வீடாகும் காசினியில் நீர் வசிக்கும் 

வீடுமே பெருவீடாங் காணேலோரெம்பாவாய்!

#விளக்கவுரை : 

தேவி ஸ்ரீ காமாட்சியின் திருப்புகழை ஆனந்தமாக பாடி, பரவசத்தால் மெய்சிலிர்த்து ஆடி, உள்ளம் பூரித்து அம்பிகையின் திருவடிகளை தேட வேண்டுமாம், தேடி கிடைத்த திருவடிகளை நம் சிரத்திலே சூடி (ஸ்ரீ வித்யா உபாசனை சற் குருவிடம் பெறுதலை இங்கே சூசகமாக சொல்கிறார் ) அம்பாளின் திருவருளால் நலம் பெற்று எல்லாரும் ஒன்றாக கூடி (எல்லாரும் உபாசனை பெற்று சத் சங்கத்தில் அடியார்களுடன் ஒன்றாக இருந்து ) பேரின்பம் கண்டால் (உள்ளுக்குள் அம்பிகையை தரிசித்து குண்டலினி  சஹஸ்ராரத்தில் சென்று   அமுத மழை பொழிந்தால் ) காடு கூட நம் சொந்த வீடு போல இருக்கும், நாம் வசிக்கும் வீடோ பெரு வீடு என்ற முக்தியாம் ஸ்ரீ புரத்தில் வசிப்பது போல ஆகும் என்று எல்லாரையும் அம்பாள் பக்தி மார்க்கத்துக்கு உபாஸனைக்கும் 


                                                            நாடுவீர்…..


                                                            பல்லவி

                                         நாடுவீர் அம்பிகையினருள் தரும் பதமலரை

                                         பாடுவீரவள் புகழை பரவசித்து மெய்சிலிர்த்து

                                                         அனுபல்லவி    

                                         தேடுவீர் கேசவன் சோதரியின் திருவடியை

                                         சூடுவீரதையுங்கள் தலைமீது மலர் போல

                                                                சரணம்

                                         ஆடுவீரனைவருடன் கூடி மகிழ்வுடனே

                                         கூடுவீரவளடியார் கூட்டத்தில் களிப்புடனே      

                                         காடுமோர்  வீடாகுமிப்புவியில் நீர் வசிக்கும்

                                         வீடுமே பெருவீடாங் காணேலோரெம்பாவாய்!


           

                                                                           


No comments:

Post a Comment