வெந்திறல் வாணன் வேள்வி இடமெய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடிமூன்று இரந்து பெறினும்,
மந்திர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர்,
அந்தரம் ஏழினூடு செலவுய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே — -பெரிய திருமொழி
வெந்திறல் வாணன் — மிக்க வலிமை கொண்ட மாவலிச் சக்கரவர்த்தியின்வேள்வி இடமெய்தி - வேள்வி நடைபெற்ற இடத்தில் எழுந்தருளிஅங்கோர் குறளாகி - அவ்விடத்தில் குட்டையான (வாமன மூர்த்தி) உருவம் கொண்டு மெய்ம்மை உணர - (அங்கிருந்தோரை தான்) உண்மையாகவே தானம் பெற வந்தவன் என்று உணர வைக்கசெந்தொழில் வேத நாவின் முனியாகி - செம்மையான தொழிலான நான்மறைகளை ஓதும் ஒரு முனிவனாகிவையம் அடிமூன்று இரந்து பெறினும் - மூன்று அடி நிலத்தை தானமாகக் கேட்டுப் பெற்ற காலத்தில்மந்திர மீது போகி - மந்தர மலைக்கும் (வடமலை/ மேருமலை) மேலாக உயர்ந்துமதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க - சந்திரன் நின்று வழிபடவும், நான்முகன் வணங்கவும்வளர்சேர் - (பிரம்மாண்டமாக) வளர்ந்த வண்ணம் சென்றுஅந்தரம் ஏழினூடு - மேல் உலகங்கள் ஏழின் உள்ளும் ஊடுருவும் வண்ணம்செலவுய்த்த பாதம் - செலுத்தப்பட்ட (திருமாலின்) அத்திருவடியானது (ஒன்றே)அது நம்மை ஆளும் அரசே - நம்மை அரசாண்டு ரட்சிக்க வல்லது!
பூவுலகோர்……
பல்லவி
பூவுலகோர் போற்றும் திருமாலைக் கேசவனை
கோவலூர் வளர் தாடாளனைப் பணிந்தேன்
அனுபல்லவி
தேவரும் நாரதரும் சுகசனகாதியரும்
யாவரும் வணங்கிடும் பரமபதநாதனை
சரணம்
மாவலியின் வேள்வி நடந்த இடமெய்தி
மூவடி மண் கேட்டு அளந்த வாமனனனின்
நான்முகனும் சந்திரனுமிந்திரனும் பணிந்திடும்
சேவடி எனையாள வேண்டுமெனத்துதித்து
No comments:
Post a Comment