நித்தமொரு புதுப்பாடல்…..
பல்லவி
நித்தமொருப் புதுப் பாடல் உனைப் போற்றி நான் பாட
சித்தமிரங்க வேணுமய்யா சென்ன கேசவப் பெருமாளே
அனுபல்லவி
எத்தனையோ கவிகள் உன் புகழைப் பாடி விட்டார்
அத்தனைக்கும் மேலே சொல்லப் புதிதாக ஏதுமில்லை
சரணம்
இத்தனை சொன்னாலும் உத்தமனே கேசவா
புத்தம் புதிதாகப் பல உண்டு உன்னிடத்தில்
பத்தல்ல நீயெடுத்த அவதாரமிவ்வுலகில்
கத்தும் கடல் நடுவே பள்ளிகொண்ட திருமாலே
No comments:
Post a Comment