சங்காபிஷேகம் கொண்ட……
பல்லவி
சங்காபிஷேகம் கொண்ட சாம்பசதாசிவனை
அங்கம் புழுதிபட வீழ்ந்து வணங்கினேன்
துரிதம்
கங்கை திங்கள் நந்தி கணங்கள்
அங்கி குபேரன் அமரர் கோனும்
பங்கய மலரமர் பிரமனுமனங்கனும்
தம் கரம் கூப்பிப் போற்றித் துதித்திடும்
அனுபல்லவி
கங்காதரனைக் கேசவன் நேசனை
திங்கள் பிறையணிந்த திரிபுராந்தகனை
சரணம்
பங்கயமலர்க்கரத்தாள் பார்வதி நாயகனை
பொங்கரவணிந்தவனை புவனம் போற்றும்
சங்கரனை சிவனை கணங்களின் தலைவனை
மங்காத புகழ் மேவும் கயிலாயவாசனை
No comments:
Post a Comment