ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
ஓங்கி உலகளந்த…..
பல்லவி
ஓங்கி உலகளந்த உத்தமனைத் துதித்தேன்
பாங்குடனே நமக்கருளும் மாதவனைக் கேசவனை
அனுபல்லவி
சாங்கியங்கள் சடங்குகள் பலவும் செய்து
நீங்காத திருமகளைத்தன் மார்பில் சுமப்பவனை
சரணம்
எங்கிருந்தோ வந்து எனையாண்டு கொண்டவனை
சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தும்
பங்கய நாபனை பாற்கடலில் துயில்பவனை
மங்களம் தந்தருளும் ஶ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment