ஆண்டாள் கைக்கிளியே…..
பல்லவி
ஆண்டாள் கைக்கிளியே நீ போயெந்தன்
வேண்டுதலையவளின் திருச்செவியில் ஓதிடுவாய்
அனுபல்லவி
பாண்டவர் நேசன் கேசவனை விரும்பி மணம்
பூண்டிடவே பாமாலைகள் புனைந்த
சரணம்
ஆண்டவன் திருவரங்கநாதனந்தப் பூமகளை
ஆண்டு கொண்டு மணம் புரிந்து கொண்டது போலவே
வேண்டி நிற்குமெனையுமாட்கொள்ள வேண்டுமெனும்
விண்ணப்பம் தனையே நல்ல தருணம் பார்த்து
No comments:
Post a Comment