குருவாயூரேகாதசி…….
பல்லவி
குருவாயூரேகதசி திருநாளில் உந்தன்
அருள் வேண்டித்துதித்தேன் குருவாயுரப்பா
அனுபல்லவி
திருமாலே கேசவனே வழிகாட்டிட வருவாய்
திருமாலே கேசவனே வழிகாட்டிட வருவாய்
சரணம்
தளரும் மென்னுள்ளமுன் திருநாமம் சொல்லும்
வளரும் மென்னுறுதியுன் வெள்ளக்கருணையினால்
துளபம் கஸ்த்தூரி களபம் தரும் மணத்தால்
கிளரும் மென்மனமும் உன் உருவின் பேரொளியல்
சூடும் மயில் பீலி திகழ் கொண்டை அழகுடனே
ஊதும் குழலோசைகள் கேட்கும் திசையெல்லாம்
கேட்கும் உன் திருநாமம் ஆத்மாவின் உள்ளே
காணும் உன் கிருஷ்ணாட்டம் எந்தன் கண் முன்னே
No comments:
Post a Comment