*#சிவபஞ்சாக்ஷர_ஸ்தோத்ரம்
1.நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!
நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும், விலக்ஷணயான கண்ணையுடையவரும், விபூதி பூசியவரும், மஹேச்வரனாயும், நித்யராயும் சுத்தராயும், திசைகளையே ஆடையாக உடையவருமான அந்த நகாரஸ்வரூபினியான சிவனுக்கு நமஸ்காரம்.
2.மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய
நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!
மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய!!
தேவகங்கைத் தண்ணீர் புஷ்பம் இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேச்வரர், பிரமதர்கள் இவர்களுக்குத் தலைவரும், மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும் ஆன அந்த மகாரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
3.சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய!!
பார்வதீ முகமாகிய தாமரைக்கொத்துக்கு சூர்யனாயிருப்பவரும், தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவரும், நீலகண்டரும், வ்ருஷபக்கொடி கொண்டவரும் ஆன அந்த சிகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
4.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-
முனீந்தர தேவார்சித சேகராய!
சந்த்ரார்கவைச்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம:சிவாய!!
வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற முனிவர்களும், தேவர்களும் பூஜித்த உச்சியையுடையவரும், சந்திரன், சூர்யன், அக்னி ஆகிய கண்களையுடையவருமாகிய அந்தவகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
5.யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதனாய!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!
யக்ஷஸ்வரூபியாவும், ஜடைதரித்தராயும், பிநாகவில்லை கையில் கொண்டவரும், பழமையன தேவரும் திகம்பரருமான அந்த யகாரரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் முற்றிற்று.
नागेन्द्रहाराय त्रिलोचनाय
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगम्बराय
तस्मै नकाराय नमः शिवाय
मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय
नन्दीश्वरप्रमथनाथमहेश्वराय ।
मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय
तस्मै मकाराय नमः शिवाय
शिवाय गौरीवदनाब्जबृंदा
सूर्याय दक्षाध्वरनाशकाय ।
श्रीनीलकण्ठाय वृषध्वजाय
तस्मै शिकाराय नमः शिवाय
वशिष्ठकुम्भोद्भवगौतमार्यमूनीन्द्र देवार्चिता शेखराय ।
चन्द्रार्कवैश्वानरलोचनाय
तस्मै वकाराय नमः शिवाय
यज्ञस्वरूपाय जटाधराय
पिनाकहस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगम्बराय
तस्मै यकाराय नमः शिवाय
நாகேச்வரனை…..
பல்லவி
நாகேச்வரனை நமச்சிவாயனை
தியாகராஜனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
ஆகம வேதங்கள் சாத்திரங்கள் போற்றும்
சாகசங்கள் புரிந்த சாம்ப சதாசிவனை
சரணம்
நாகங்களையணிந்த நாகாபரணனை
சோகங்களைக்களையும் திரிபுராந்தகனை
திருநீறு பூசிய முக்கண் திகம்பரனை
நாகேந்திரனை நமஸ்கரித்தேன்
கங்கை நீர் சொரிந்து நறுமணமலர்சூடிய
கங்காதரனை நாதவடிவானவனை
திங்கள் பிறையணிந்தவனை கேசவன் நேசனை
சங்கரனை சாம்ப சதாசிவனைப் பணிந்தேன்
பாகம் பிரியாள் பார்வதியாம் தாமரையை
வேகமுடன் மலர வைக்கும் கதிரவனாய்த்திகழும்
சேகரனை தட்சன் வேள்வியையழித்தவனை
நீலகண்டனை விடையார் கொடியோனை
கதிரவன் மதியை அக்னியைக் கண்காளாய்
பதித்த பரமனை வகார வடிவினனை
மதிப்புடைய வசிட்டர் கௌதமரகத்தியர்
துதித்திடுமீசனை அமரருக்கதிபனை
சடையனை சாம்ப பரமேச்வரனை சிவனை
விடையேறுமீசனை வேதஸ்வரூபனை
உடைகள் திசைகளாய் விளங்கும் திகம்பரனை
சுடலைமாடனை மனமாரத் துதித்தேன்
No comments:
Post a Comment