ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
.
கரமைந்துடையவனை….
பல்லவி
கரமைந்துடைய ஆனைமுகத்தோனை
பிறை நிலவென தந்தமுடையவனைப்பணிந்தேன்
அனுபல்லவி
அரனவன் மகனை கேசவன் மருகனை
மறைபொருளானவனை மத்தள வயிறனை
சரணம்
நரர்சுரர் நான்முகன் நந்தி கணங்கள்
சுரபதி சுகசனகாதியர் முனிவர்கள்
சரவணனுடனே கடவுளரனைவரும்
கரம் பணிந்தேத்தும் முழுமுதற்கடவுளை
No comments:
Post a Comment