வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா!
மனை சேர் ஆயர் குலமுதலே மாமாயனே மாதவா! சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா! இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனேவினையேன் வினைதீர் மருந்தானாய்*
விண்ணோர் தலைவா* கேசவா,
மனைசே ராயர் குலமுதலே*
மாமா யன்னே* மாதவா,
சினையேய் தழைய மராமரங்கள்
ஏழும் எய்தாய் சிரீதரா,
இனையா யினைய பெயரினாய்
என்று நைவன் அடியேனே.
அனைத்தும் நீயென….
பல்லவி
அனைத்தும் நீயென அறிந்துனைத் துதித்தேன்
எனையாண்டருளென திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
வனமாலை துளபம் கௌஸ்துபமணிந்தவனே
அனங்கனைப் பிரமனைப் படைத்த மாதவனே
சரணம்
வினையேன் வினையறுக்கும் மருந்தே கேசவா
மனையிற் சிறந்த ஆயர்மனையுறைபவனே
வனத்துறை மராமரமேழையும் துளைத்தவனே
உனையே பல நாமமோதியழைத்தேனே
No comments:
Post a Comment