कण्ठे विषं विषमुचो भुजगा: कपर्दे पार्श्वे च भूतपतयः प्रमथाश्च भीमाः । शोणाचलेश मुपसृत्य भजेत को वा नस्यात्तवाम्ब सविधे यदि सन्निधानम् ॥ ६ ॥
கண்டே விஷம் விஷமுசோ புஜகா: கபர்தே
பார்ச்வே ச பூதபதய: ப்ரமதாச்ச பீமா: |
ஶோணாசலேசம் உபஸ்ருத்ய பஜேத கோ வா
நஸ்யாத் தவாம்ப ஸவிதே யதி ஸன்னிதானம் || 6
ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் இயற்றிய அபீதகுசாம்பாள் ஸ்தவம்.
பொருள்: கழுத்தில் விஷம், ஜடையிலோ நஞ்சைக் கக்கும் கொடிய ஸர்ப்பங்கள், பக்கத்திலோ பயத்தையுண்டு பண்ணுகின்ற பூதநாயகர்களான ப்ரமத கணங்கள். இத்தகைய அருணகிரிநாதனை ஏ தாயே! அருகில் உன் ஸான்னித்யம் இல்லாவிடில் யார் தான்சேவிப்பார்.
மடமயிலாய் வந்து…..
பல்லவி
மடமயிலாய் வந்து அன்னை கற்பகவல்லி
உடனிருப்பதாலுமன்றோரடியாருனைப் பணிந்தார்
அனுபல்லவி
வடபத்ராசாயி கேசவன் சோதரி
இடப்பாகம் தனிலே அமைந்திருப்பதாலும்
சரணம்
விடமுண்ட கண்டனே வீதி விடங்கனே
படமெடுத்த பாம்பணிந்த பரமேச்வரனே
அடலேறு வாகனனே பூதகணங்கள் சூழ்
சுடலைப்பொடி பூசிய கபாலீச்வரனே
No comments:
Post a Comment