Tuesday, 20 December 2022

ஓலம் செய்…..


அவ்வைப் பாட்டி நிறைய சொல்லி வச்சிருக்காக அழகுத் தமிழில்...#மூதுரையில்

சில பேருக்கு பொறுமையே கிடையாது. காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டது  போல  காரியம் பண்ணுவார்கள்.இந்த "இன்ஸ்டன்ட்" யுகத்தில் கூட எல்லாமும் உடனே கிடைத்து விடுவதில்லை.. வெற்றியோ தோல்வியோ ..நன்மையோ தீமையோ...எல்லா வற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அது கனிந்து வர வேண்டும்..எனவே அவ்வைப்பாட்டி சொல்கிறார்:

"அடுத்து முயன்றாலும்

ஆகும் நாளன்றி

எடுத்த கருமங்கள் ஆகா...

கொடுத்த உருவத்தால்

நீண்ட உயர் மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா....

 பூமிக்கும் வானுக்குமிடையே கொடுத்திருப்பது போல தோற்றத்துடன் நீண்டு வளர்ந்து நிற்கும் உயர்ந்த மரங்கள் எல்லாம் அந்தந்தப் பருவ காலத்தில் அல்லாமல் மற்றக் காலங்களில் பழங்களைக் கொடுப்பதில்லை. அவற்றைப் போலவே அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் கைகூடும் நாள் என்று விதிக்கப்பட்ட காலத்தில் அல்லாமல் மேற்கொண்ட காரியங்கள் கைகூடா.செயல்கள் உடனே கைகூட வேண்டும் என்று அவசரப்படாமல் அதற்குரிய காலம்வரை பொறுமையுடன் காத்திருத்தல் இன்றியமையாதது...

     

                                                                 ஓலம் செய்…..

                                                                      பல்லவி

                                           ஓலம் செய் கடல் நடுவே பள்ளி கொண்ட கேசவனே

                                           ஞாலம் உண்டுமிழ்ந்த கண்ணனும் நீயே

                                                                   அனுபல்லவி

                                           ஆலிலை மேல் துயின்ற அரவணைப்பள்ளியானே

                                            பாலனுனைப் பணிந்தேன் பட்டறிவு எனக்கருள்வாய்

                                                                        சரணம்

                                           காலத்தாலன்றி கனிதரா மரங்கள்

                                           கோலமிகு பெண்டிர் பூப்படைவதங்கனமே       

                                           சீலமிகு மந்தரும் ஞானியருமிதையறிந்தே

                                           ஞாலமும்  கருதிப்பெறுவர் இடத்தாற் செய்து       


No comments:

Post a Comment