முருனைக் கும்பிட்டு….
பல்லவி
முருகனைக்கும்பிட்டு மனமாரத்துதித்தால்
அருகினில் ஓடி வருவானவன் ஆனந்தம் தேடித்தருவான்
அனுபல்லவி
திருமால் கேசவன் மருகனவனை நினைத்தால்
வருமிடர் தீர்த்து கருமவினை களைந்து நல்லருள் புரிந்திடுவான்
சரணம்
குருவெனக்கும்பிட்ட பரமசிவனுக்கு மந்திரம் சொன்னவனின்
திருவடி பணிந்து நம்பித்துதிப்பவர்க்கு
பெரும்பிணி பவக்கடல் கடந்திடும் வழியுரைப்பான்
சிறுவனென்றாலும் பெரிய கடவுளவன் நம்பித்துதித்திடுவாய்
No comments:
Post a Comment