Friday, 30 December 2022

பித்தனாய்த் திரியுமெனை……

 

                                               பித்தனாய்த் திரியுமெனை…..



                                               பித்தனாய்த் திரியுமெனை……


                                                               பல்லவி

                                      பித்தனாய்த்திரியுமெனைச் சித்தானய்ச் செய்பவளே

                                      மத்தூர் அரசியே மாகாளி உனைத்துதித்தேன்

                                                              அனுபல்லவி

                                      சத்தியமூர்த்தி கேசவன் சோதரியே

                                      அத்தன் சிவன் விரும்பும் சிவகாமசுந்தரியே

                                                                   சரணம்

                                      எத்தனாய்த் திரிந்தயெனை உத்தமருடன் சேர்த்த

                                      நித்திய கல்யாணியே உத்தமியே தாயே

                                      சக்தியும் சிவமும் சேர்ந்த பராசக்தியும் நீயே

                                      முத்தியளித்தெனை ஆண்டருள்வாயே                                      

                                      

Thursday, 29 December 2022

மாயனைப்பாடி……...

 எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடாலோர் எம்பாவாய்

                                            மாயனைப்பாடி……...    

                                                    பல்லவி

                                    மாயனைப் பாடி மகிழ்வீரே தோழியரே

                                    ஓயாமல் வாயாடிக் காலம் கடத்தாமல்

                                                       அனுபல்லவி

                                        காயம் பட அழைக்காமல் நேயமுடனழைத்திடுவீர்

                                        ஆயர்குலத் தோழியரே உமக்கென்ன தனிச்சிறப்பு

                                                            சரணம்

                                        தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

                                        பேய் முலையுண்டவனை மருப்பொசித்த மாதவனை   

                                        காயாம்பூவண்ணனை கம்சனையழித்தவனை

                                        தூயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது                                                                                              

   

புதுப்புது பாடல்கள்……

 


  

                                       புதுப்புது  பாடல்கள்……


                                            பல்லவி

                         புதுப்புது பாடல்கள் புனைந்திடும் வல்லமையை

                         யதுகுலத்திலகனே கேசவனே எனக்கருள்வாய்

                                           அனுபல்லவி

                         மதுகைடபாதிகளை வதம் செய்த கண்ணனே

                         குதூகலம் தரும் கோபியர்கள் லோலனே

                                                சரணம்

                         எதுகை மோனையுடன் இசைத்திடத் தோதாக

                         இதிகாச புராணக் கதைகளுடன்

                         விதம் விதமான  பண்ணிசை வடிவுடனே      

                         மதிமயங்கச் செய்யும் மதுர கீதங்கள்        

                                         

Wednesday, 28 December 2022

ஆண்டாள் கைக்கிளியே…..

 


                                                         ஆண்டாள் கைக்கிளியே…..


                                                                      பல்லவி

                                                ஆண்டாள் கைக்கிளியே நீ போயெந்தன்

                                                வேண்டுதலையவளின் திருச்செவியில் ஓதிடுவாய்

                                                                    அனுபல்லவி

                                                பாண்டவர் நேசன் கேசவனை விரும்பி மணம்

                                                பூண்டிடவே பாமாலைகள் புனைந்த

                                                                         சரணம்

                                                ஆண்டவன் திருவரங்கநாதனந்தப் பூமகளை

                                                ஆண்டு கொண்டு மணம் புரிந்து கொண்டது போலவே

                                                வேண்டி நிற்குமெனையுமாட்கொள்ள வேண்டுமெனும்

                                                விண்ணப்பம் தனையே நல்ல தருணம்  பார்த்து

                                                                

                                                

எத்தனை இடர்……




                                     எத்தனை இடர்……


                                              பல்லவி

                         எத்தனை இடர் துயர் எதிர்வந்த போதும்
                         அத்தனே உனது திருவடியேயென் துணை
                                            
                                            அனுபல்லவி
                           
                          அத்புத நாராயணன் கேசவன் நேசனே
                          வித்தகர் வேதியர் பலர் போற்றுமீசனே

                                               சரணம்
                          
                           சித்தத்திலென்றும் சிவநாமமே வைத்தேன்
                           பித்தனுனையன்றி பிற தெய்வமறியேன்
                           சக்தியின் நாயகனே சாம்ப சதா சிவனே
                           இத்தரை மீதுழலும் எனையாண்டருள்வாய்
                            

Monday, 26 December 2022

பராசக்தியின்…..

 

                                       பராசக்தியின்…..

                                             பல்லவி

                             பராசக்தியின் பதமலர் பணிந்தேன்

                             கராரவிந்தம் காண்பித்தபயம் தரும்

                                               துரிதம்

                             சுரபதி ரதிபதி சரச்வதியின்பதி

                             கணபதி பசுபதி கரம்பணிந்தேத்தும்

                                          அனுபல்லவி   

                             சுராசுரர் பணியும் சுகுண சுந்தரி

                             முராரி கேசவன் சோதரி சங்கரி

                                            சரணம்

                              புராரி மனங்கவர் திரிபுரசுந்தரி

                              வராபயகரி ஏகாம்பரேச்வரி    

                              சராசரங்களைக் காக்கும் புவனேச்வரி    

                              அராளகேசி அகிலாண்டேச்வரி 

                                                                                            

Saturday, 24 December 2022

அட்டவீரட்டான…..

 


                                                    அட்டவீரட்டான…..


                                                         பல்லவி

                                         அட்டவீரட்டானத் திரிபுரனை சிவனை 

                                         இட்டமுடன் பணிந்தேன் திருவதிகைத் திருத்தலத்தில் 

                                                        அனுபல்லவி

                                         கெட்டலைந்து திரிந்த மாலி,தாரகன்,கமலன்

                                         துட்ட அரக்கர்களை வதைத்த ஈசனை

                                                             சரணம்

                                         எட்டெழுத்து நாமம் கொண்ட கேசவன் நேசனை

                                         வட்டநிலாவின் ஒருகலையணிந்தவனை

                                         பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனை                           

                                         மட்டவிழ் மலர் தூவி மனமாரத் துதித்து


           

Friday, 23 December 2022

நாடுவீர்…..

 மார்கழி ஸ்பெஷல் ! #ஸ்ரீகாமாக்ஷி #அருட்பாவை 9:

பாடுவீர் பாடி பரவசத்தால் மெய்சிலிர்த்து 

ஆடுவீர் ஆடி அடங்கியுளம் பூரித்து 

தேடுவீர் தேடி திருவடியை நுஞ்சிரமேற்

சூடுவீர் சூடி சுமங்கலையை வேவியருள் 

நாடுவீர் நாடி நலம்பெறவே அன்பருடன்

கூடுவீர் கூடிநீர் பேரின்பங் கண்டீரேல் 

காடுமோர் வீடாகும் காசினியில் நீர் வசிக்கும் 

வீடுமே பெருவீடாங் காணேலோரெம்பாவாய்!

#விளக்கவுரை : 

தேவி ஸ்ரீ காமாட்சியின் திருப்புகழை ஆனந்தமாக பாடி, பரவசத்தால் மெய்சிலிர்த்து ஆடி, உள்ளம் பூரித்து அம்பிகையின் திருவடிகளை தேட வேண்டுமாம், தேடி கிடைத்த திருவடிகளை நம் சிரத்திலே சூடி (ஸ்ரீ வித்யா உபாசனை சற் குருவிடம் பெறுதலை இங்கே சூசகமாக சொல்கிறார் ) அம்பாளின் திருவருளால் நலம் பெற்று எல்லாரும் ஒன்றாக கூடி (எல்லாரும் உபாசனை பெற்று சத் சங்கத்தில் அடியார்களுடன் ஒன்றாக இருந்து ) பேரின்பம் கண்டால் (உள்ளுக்குள் அம்பிகையை தரிசித்து குண்டலினி  சஹஸ்ராரத்தில் சென்று   அமுத மழை பொழிந்தால் ) காடு கூட நம் சொந்த வீடு போல இருக்கும், நாம் வசிக்கும் வீடோ பெரு வீடு என்ற முக்தியாம் ஸ்ரீ புரத்தில் வசிப்பது போல ஆகும் என்று எல்லாரையும் அம்பாள் பக்தி மார்க்கத்துக்கு உபாஸனைக்கும் 


                                                            நாடுவீர்…..


                                                            பல்லவி

                                         நாடுவீர் அம்பிகையினருள் தரும் பதமலரை

                                         பாடுவீரவள் புகழை பரவசித்து மெய்சிலிர்த்து

                                                         அனுபல்லவி    

                                         தேடுவீர் கேசவன் சோதரியின் திருவடியை

                                         சூடுவீரதையுங்கள் தலைமீது மலர் போல

                                                                சரணம்

                                         ஆடுவீரனைவருடன் கூடி மகிழ்வுடனே

                                         கூடுவீரவளடியார் கூட்டத்தில் களிப்புடனே      

                                         காடுமோர்  வீடாகுமிப்புவியில் நீர் வசிக்கும்

                                         வீடுமே பெருவீடாங் காணேலோரெம்பாவாய்!


           

                                                                           


Thursday, 22 December 2022

கூரிய பார்வைகொண்ட…..

 அசாத்ய சாதக ஸ்வாமிந்

அசாத்யம் தவகிம் வதI

ராம தூத க்ருபா சிந்தோ 

மத் கார்யம் சாதய ப்ரபோ Ii

Oh Lord who did the impossible, please  tell me  what is impossible to you,

Oh emissary of Rama, ocean of mercy, Oh Lord complete my job



                                   கூரிய பார்வைகொண்ட…..            

                                            பல்லவி

                        கூரிய பார்வை கொண்ட வாயுகுமாரனே      

                        காரியசித்தி நானடைந்திட அருள்வாய்      

                                           அனுபல்லவி

                        கோரிய வரம் தரும் கோதண்டராமனிடம்   

                        சீரிய பக்தியுள்ள  சிறிய திருவடியே        

                                                 சரணம்            

                       அசாத்தியத்தை சாத்தியமாக்கும்

                       அசாதாரணனே ஆஞ்சநேயனே

                       நிசாசரன் தசகண்டனைக் காண

                       தசரத குமாரன் தூதனாய்ச்சென்றவனே

                      

                        

முருனைக் கும்பிட்டு….

 


                                 முருனைக் கும்பிட்டு….


                                        பல்லவி

                        முருகனைக்கும்பிட்டு மனமாரத்துதித்தால்

                        அருகினில் ஓடி வருவானவன் ஆனந்தம் தேடித்தருவான்

                                       அனுபல்லவி

                        திருமால் கேசவன் மருகனவனை நினைத்தால்

                        வருமிடர் தீர்த்து கருமவினை களைந்து நல்லருள் புரிந்திடுவான்

                                              சரணம்

                        குருவெனக்கும்பிட்ட  பரமசிவனுக்கு மந்திரம் சொன்னவனின்

                        திருவடி பணிந்து நம்பித்துதிப்பவர்க்கு

                        பெரும்பிணி பவக்கடல் கடந்திடும் வழியுரைப்பான்      

                        சிறுவனென்றாலும் பெரிய கடவுளவன் நம்பித்துதித்திடுவாய்                                                                  

Tuesday, 20 December 2022

ஓலம் செய்…..


அவ்வைப் பாட்டி நிறைய சொல்லி வச்சிருக்காக அழகுத் தமிழில்...#மூதுரையில்

சில பேருக்கு பொறுமையே கிடையாது. காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டது  போல  காரியம் பண்ணுவார்கள்.இந்த "இன்ஸ்டன்ட்" யுகத்தில் கூட எல்லாமும் உடனே கிடைத்து விடுவதில்லை.. வெற்றியோ தோல்வியோ ..நன்மையோ தீமையோ...எல்லா வற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அது கனிந்து வர வேண்டும்..எனவே அவ்வைப்பாட்டி சொல்கிறார்:

"அடுத்து முயன்றாலும்

ஆகும் நாளன்றி

எடுத்த கருமங்கள் ஆகா...

கொடுத்த உருவத்தால்

நீண்ட உயர் மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா....

 பூமிக்கும் வானுக்குமிடையே கொடுத்திருப்பது போல தோற்றத்துடன் நீண்டு வளர்ந்து நிற்கும் உயர்ந்த மரங்கள் எல்லாம் அந்தந்தப் பருவ காலத்தில் அல்லாமல் மற்றக் காலங்களில் பழங்களைக் கொடுப்பதில்லை. அவற்றைப் போலவே அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் கைகூடும் நாள் என்று விதிக்கப்பட்ட காலத்தில் அல்லாமல் மேற்கொண்ட காரியங்கள் கைகூடா.செயல்கள் உடனே கைகூட வேண்டும் என்று அவசரப்படாமல் அதற்குரிய காலம்வரை பொறுமையுடன் காத்திருத்தல் இன்றியமையாதது...

     

                                                                 ஓலம் செய்…..

                                                                      பல்லவி

                                           ஓலம் செய் கடல் நடுவே பள்ளி கொண்ட கேசவனே

                                           ஞாலம் உண்டுமிழ்ந்த கண்ணனும் நீயே

                                                                   அனுபல்லவி

                                           ஆலிலை மேல் துயின்ற அரவணைப்பள்ளியானே

                                            பாலனுனைப் பணிந்தேன் பட்டறிவு எனக்கருள்வாய்

                                                                        சரணம்

                                           காலத்தாலன்றி கனிதரா மரங்கள்

                                           கோலமிகு பெண்டிர் பூப்படைவதங்கனமே       

                                           சீலமிகு மந்தரும் ஞானியருமிதையறிந்தே

                                           ஞாலமும்  கருதிப்பெறுவர் இடத்தாற் செய்து       


பண்டரீபுரத்தானின்….

 

                                                              பண்டரீபுரத்தானின்….


                                                                      பல்லவி

                                           பண்டரீபுரத்தானின் பாதம் தொட்டுப் பணிந்தேன்

                                           தண்டனிட்டுத்திருவடியில் தலை வைத்து வணங்கி

                                                                    அனுபல்லவி

                                           அண்ட சராசரங்களனைத்தையும் காப்பவன்

                                           கண்டவர் மனங்களைக் களிப்புறச் செய்வன்

                                                                        சரணம்

                                           பண்ணிசைத்துப்பாடி அவனருளை யாசிக்கும்

                                           புண்ணியசீலருக்கு கண்ணெதிரில் தெரிபவன்

                                           கண்ணன் கேசவன் நாராயணனுமவன்

                                           விண்ணோரும் மண்ணோரும் போற்றும் ஹரி விட்டலன்                                           

                                           

   

Monday, 19 December 2022

மாதவா கேசவா…….

 


         

                                    மாதவா கேசவா…….


                                             பல்லவி

                                 மாதவா கேசவா ஶ்ரீ வாசுதேவா

                                 யாதவா உனையே அனுதினம் துதித்தேன்

                                             அனுபல்லவி

                                 பூதனையை வதைத்த ஶ்ரீதரனே

                                 கோதையின் மனம் கவர்ந்த ஶ்ரீரங்கநாதனே

                                                  சரணம்                                

                                 பூதலமுண்டுமிழ்ந்த மதுசூதனனே

                                 மாதா அசோதை மனம் மகிழ அதை

                                 தோதாய் வாய் திறந்து காட்டிய கண்ணனே

                                 வேதனை களைந்தெனை ஆண்டருள்வாய்                                 

                                 

          

Sunday, 18 December 2022

மாதொருபாகனை……

 


                                 மாதொருபாகனை……


                                             பல்லவி

                          மாதொருபாகனை மாதுமையாள் நாதனை

                          பாதம் பணிந்து பரவசமடைந்தேன்

                                              துரிதம்

                           ஆதவனிந்திரன் சந்திரன் நந்தி                                   

                           பூதகணங்கள் கரம் பணிந்தேத்தும்

                                           அனுபல்லவி

                          சீதக்கடல் துயிலும் கேசவன் நேசனை

                          வேதங்கள் கொண்டாடும் வேதபுரீசனை

                                               சரணம்

                          பாதகம் புரிந்த திரிபுரனையெரித்தவனை

                          நாதவடிவானவனை நமச்சிவாயனை

                          கீத வாத்திய நாட்டிய ரசிகனை

                          பூதலம் போற்றும் அகிலாண்டேச்வரனை

                          

பாதம் பணிந்தேன்……

 








                                           பாதம் பணிந்தேன்……


                                                    பல்லவி

                                    பாதம் பணிந்தேன் பரமசிவா  - (உந்தன்)

                                    யாதும் நீயென்றே அறிந்த பின்னாலே

                                                  அனுபல்லவி

                                   ஓதக்கடல் நடுவே கிடந்துறங்கும் கேசவனும்

                                   வேதமுதல்வன் பிரமனும் வணங்கிடும்

                                                     சரணம்

                                   பூதகணங்களும் நந்தியுமிந்திரனும்

                                   சீதமதியும் சனகாதி முனிவர்களும்

                                   வேங்களோதும் முனிவரும் யோகியரும்

                                   பூதலத்தோரும் கரம் பணிந்தேத்துமுன்

                                   

Saturday, 17 December 2022

ஓங்கி உலகளந்த…..

 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!


                                                ஓங்கி உலகளந்த…..

                                                                 பல்லவி

                                     ஓங்கி உலகளந்த உத்தமனைத் துதித்தேன்
                                     பாங்குடனே நமக்கருளும் மாதவனைக் கேசவனை

                                                       அனுபல்லவி
                                  
                                     சாங்கியங்கள் சடங்குகள் பலவும் செய்து
                                     நீங்காத திருமகளைத்தன் மார்பில் சுமப்பவனை
                                     
                                                             சரணம்

                                     எங்கிருந்தோ வந்து எனையாண்டு கொண்டவனை
                                     சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தும்
                                     பங்கய நாபனை பாற்கடலில் துயில்பவனை
                                     மங்களம் தந்தருளும் ஶ்ரீமன் நாராயணனை

                                     
                                     

Friday, 16 December 2022

திருப்பாவைப்புடவையில்

 

                                                திருப்பாவைப்புடவையில்….


                                                          பல்லவி

                                    திருப்பாவைப்புடவையிலெழுந்தருளிக் காட்சிதரும்

                                    திருமகளாண்டாளின் புகழ் பாடித்துதித்தேன்

                                                        அனுபல்லவி

                                    அருளாளன் கேசவன் ரங்கமன்னார் நாயகியை

                                    திருப்பாற்கடலுதித்த திருவென்னும் பெயராளை    

                                                             சரணம்

                                    அருள் வேண்டித்துதித்திடுமடியவர்க்கெல்லாம்

                                    பெருஞ்செல்வம் கருணை நல்வாழ்வளிப்பவளை

                                    இருவினைப் பயன்களையும் கோதாப்பிராட்டியை

                                    பெருமைக்குரிய வில்லிபுத்தூர் திருத்தலத்தில்                                                                         

                                     


Thursday, 15 December 2022

மாதே மலர்விழியே

   


                        மாதே மலர்விழியே

                                  பல்லவி

                  மாதே மலர்விழியே ஈதென்ன பேருறக்கம்

                  காதிலந்தப் பரமன் புகழ் பாடக்கேட்ட பின்னும்        

                                அனுபல்லவி   

                   பூதலம் போற்றுமந்தப் பரமசிவன் பெருமைகளை

                   வீதியில் ஒலிப்பதுந்தன் திருச்செவியில் கேளாமல்                                                                  

                        சரணம்

           ஆதியுமந்தமுமில்லாத சோதியை

           மாதேவன் சிலம்பணிந்த கழலடியுடையவனை

           மாதவன் கேசவன் நேசனை ஈசனை

           மாதர்கள் புகழ்ந்து பாடிடக் கேட்டும்           

           

    ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?
    மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது) 

    இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக. ((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)

திருவெம்பாவை இருபது பாடல்களைக்

கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளி

யெழுச்சி யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.

திருவெம்பாவை பாடல் : 1

##############

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

********************

விளக்கம் 

********************

வாள் போன்ற, அகண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும், முடிவும் இல்லாத ஒளியாகிய சிவனைப் பற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னாலும், இன்னும் தூங்குகிறாயோ? உன் காது உணர்ச்சி அற்றுப் போய்விட்டதோ? மகாதேவனின் பாதங்களை வாழ்த்தி நாங்கள் எழுப்பிய வாழ்த்தொலி, வழி எங்கும் ஒலிப்பதைக் கேட்ட பின்னும், மலர்கள் தூவப்பட்ட படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நீ, மெய்மறந்து எழுவதும், பின்பு  திரும்பப் புரண்டு படுப்பதுமாய் செய்வதறியாது தவிக்கிறாய். என் தோழியே!


ஓம் நமசிவாய  !

கோதை பாடிய…..

 

                                 கோதை பாடிய…..


                                       பல்லவி

                    கோதை பாடிய கீதையைப் பாடி நாம்

                    வேதனை வினகளை களைந்திடுவோம் தினம்

                                    அனுபல்லவி

                    ராதையாய்த் தோன்றி கேசவன் மனம் கவர்ந்த 

                    பேதையவள் புனைந்த அற்புதப் பாமாலையை

                                         சரணம்

                     வேதங்களிலுள்ள சாரங்களனைத்தையும்        

                     சாறெனப் பிழிந்து தன்னுள்ளடக்கிய

                     கீதையில் கண்ணன் சொன்ன தத்துவங்கள்  முழுதும்

                     சூதனமாயெளிய பாடல்களில் விளக்கும்                                              

Tuesday, 13 December 2022

மங்காத…..

 பத்தி முதலாமவற்றில் பதி எனக்கு கூடாமல்,

எத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்,

முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்,

அத்திகிரி அருளாளற்கு அடைக்கலம் நான் புகுந்தேனே..

I surrender my soul at the sacred feet of PeraruLaaLan, who resides at the most important of the seven cities that bless their residents with Moksham. I have come to the realization that I am powerless to attain moksham through the difficult-to-practice Bhakthi yOgam as upaayam. I have hence chosen Prapatthi at the lotus feet of Varadhan as the saving grace for me and am performing saraNaagathi. This act of mine (performance of SaraNaagathi at the Lord’s feet as the helpless one with no other recourse) is like the deed of the evil-minded Kaakaasuran, who committed grave apachaarams to the Lord’s consort and was yet saved by the Lord, when he fell at the feet of the Lord as a saraNaagathan without any other recourse.

நான் என்ன செய்வேன். என்னால் மனதை ஒருமித்து உன்னை நினைக்க முடியவில்லையே. பக்தி அவ்வளவு எளிது அல்ல. எங்கு சென்று அமைதியாக அமர்ந்தாலும், இடம் தான் அமைதியாக இருக்கிறதே தவிர மனம் அமைதியுறவில்லையே. எண்ணற்ற எண்ணங்கள் என் மனதை திசை திருப்புகிறதே. நான் ஒரு காகம் தான். எங்கெங்கோ வெவ்வேறு என்ன, எட்டு திசைகளிலுமே மாற்றி மாற்றி பறந்து களைப்புற்று,நீயே கதி என்று உன் திருவடிகளில் விழுந்த தாகம் கொண்ட காகம். முத்தி தரும் சப்த க்ஷேத்திரங்களில் தலை சிறந்ததாக அத்திகிரி எனும் காஞ்சிபுர வாசனான ஸ்ரீ வரதராஜா , உன் திருவடிகளே சரணம் என்று முதல் பாசுரத்திலேயே அற்புதமாக பாடுகிறார் சுவாமி தேசிகன்.


                                                       மங்காத…..


                                                           பல்லவி

                                          மங்காத புகழ் மேவும் அத்திகிரி அருளாளா

                                          எங்கும் நிறைந்த உனதடியே சரணடைந்தேன்   

                                                         அனுபல்லவி

                                          சங்கும் சக்கரமும் கையிலேந்தும் கேசவனே

                                          பங்கய நாபனே பாற்கடல் வாசனே       

                                                               சரணம்                                                                                         

                                          சங்கமித்தோரிடம் சேரமுடியாமலென் மனம்

                                          எங்கெங்கோ அலைந்து திரிந்து சலித்த பின்

                                          பங்கய மலராளுக்கு பங்கமிழைத்த காகம் போல்

                                          அங்குமிங்கும் தேடியுன் திருவடியில் விழுந்தது

ஶ்ரீவரதராஜபெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏

Monday, 12 December 2022

உருவம் நீயல்ல…..


                உருவம் நீயல்ல…..


                      பல்லவி

          உருவம் நீயல்ல உடலும் நீயல்ல

          கருவம் கொள்ளாதே கடவுள் தந்த ஆன்மாவே

                    அனுபல்லவி

          கருவிலுருவான உன்னுருவமொருநாள்

          நெருப்பில் கருகி இயற்கையுடன் கலந்துவிடும்

                        சரணம்

          பருவ அழகெல்லாம் பாழாகுமொரு நாள்

          நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

          பெருமை உடைய இவ்வுலக வாழ்வில்

          அருவமாய்த் திரியும் கேசவனே சதமென்றும்


 #உருவத்தை_வைத்து_எடை_போடாதே.....


ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.


அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.


அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு  

துன்பப்பட்டார்.


அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.


திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.


கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.


இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.


அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.


பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார்.


ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.


"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?


அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.


மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.


"நான் பிச்சைக்காரனா,  

மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.


பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.


நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.


வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்


.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.


அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.


ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை


." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.


"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.


அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.


அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.


குள்ளமாக,கறுப்பாக,  

எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.


சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.


"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.


"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,  

கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.


"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.


"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.  

  

இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.


சபை முழுக்க கொதித்தெழுந்தது.  

"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.


"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.


"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.


"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.


உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.


"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.


ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா?இல்லை.


இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.


என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?


தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.


இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.


பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.


அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.


வந்தவர்


மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.


ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.


அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?


தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.


உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.


ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.  

தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.  

  

பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.  

முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.


ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...


உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை


கடவுளை தவிர..

மாயாதீர்த்த ஸ்வரூபிணி…..

 


                     மாயாதீர்த்த ஸ்வரூபிணி…..


                                     பல்லவி

                        மாயாதீர்த்த ஸ்வரூபிணி

                        தாயே நீயே எனக்கருள்வாயே

                                   அனுபல்லவி

                        காயாம்பூ வண்ணன் கேசவன் சோதரி

                        ஓயாதுனையே நாளும் துதித்தேன்

                                          சரணம்

                        மாயாமாளவ கௌளப்ரியே

                        மாயே மரகதவல்லியே

                        மகா திரிபுரசுந்தரி நீயே

                        ஆயசம் தீர்த்தெனை ஆண்டருள்வாயே

                        

ஒரு சொல் ராமா……

 

                         ஒரு சொல் ராமா……


                                        பல்லவி

                   ஒரு சொல் ராமா என்று அழைத்தாலும் போதும்

                   அருகினில் வருவான் அருள் மழை பொழிவான்

                                     அனுபல்லவி

                   பெருமைக்குரிய ஜானகியின் கரம் பிடித்த

                   பேரருளாளன்  மாதவன்  கேசவன்       

                                      சரணம்  

                   உருகியவன் நாமமுரைப்பவர்க்கெல்லாம்

                   இருவினை பயன்கள் நீங்கிடச் செய்வான்

                   தரும நெறி காக்க தரணியிலுதித்த

                   திருமாலவனே ஶ்ரீமன் நாராயணன்        

           

                               

Sunday, 11 December 2022

திருவரங்க நாயகி…..

 ஆழ்வார்களும் ஆசார்யர்களும் கவிச் சக்கரவர்த்தியும் வாக்கேயக்காரர்களும் நடந்து, வாழ்ந்து, பாடிப் பரவிய பிரதேசத்தில் நாமும் நடந்து செல்கிறோம் என்கிற நினைப்பே சிலிர்ப்பூட்டுவதாக இருக்கிறது. 

அரங்கனைக் காண அலைமோதும் கூட்டம்! பக்தர்கள் வரிசை எங்கு ஆரம்பித்து, எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு நீண்டு வளைந்து செல்கிறது. ‘ரங்கா! ரங்கா!’ என்று கூவிக்கொண்டு, எதிர்பார்ப்பும் ஆவலும் ததும்ப நகரும் வரிசையில் நாமும் சேர்ந்து கொள்கிறோம். 

அதோ கருடாழ் வார் - ஆஜானுபாகுவாக இருந்தாலும் அடிபணியும் பாவனையில் இருக்கிறார். நம் மனமும் பணிகிறது. கொடி மரத்தை ஒருவாறு கடந்து கர்ப கிருஹத்தை நெருங்கிக் கொண்டிருக்-கிறோம். விபீஷ ணன் ஸ்ரீராமனிடம் பெற்று இழந்த பிரணவாகார விமானத்தின் கீழ் அமைந் துள்ள கருவறையில் ஆதிசேஷன் மேல் அறிதுயில் கொண்டிருக்கிறான் அரங்கன். வெள்ளிக் கவசமும் கண் மலர்களும் சாற்றியிருக்கிறார்கள்.  அவனது கருமேனியை அவை அழகாக வடிவெடுத்துக் காட்ட, நிலைப்படியை அடையும்போது திருமேனி முழுவதுமாக தரிசனமாகிறது. ஒயிலாகத் தலைக்குயரம் கொடுக்கும் வலக்கரம், நீண்டு துவளும் இடது கரம், செவ்வரியோடிய அப்பெரிய வாய கண்கள், உலக ரகசியங்களை ஒன்றுவிடாமல் அறிந்தும் அறியாததுபோல் மாயப் புன்னகையில் மலர்ந்துள்ள திருவாய் ‘ரமாந்தரங்கம்’ என்று தீக்ஷிதர் வர்ணிக்கும் மூலவர் அருகில் ஸ்ரீதேவி- பூதேவி இல்லை. அன்னியோன்னிய ஹ்ருதய வாஸினியாக திருமார்பில் மட்டுமே லக்ஷ்மி. ரங்கநாயகி தாயார், கமலவல்லித் தாயார், துலுக்க நாச்சியார் என்று அரங்கனுக்கு தேவியர் இருந்தாலும் அவர்களைத் தனித்தனிச் சன்னிதிகளுக்கு சென்றே நாம் தரிசிக்க வேண்டும்.  இப்போதைக்கு அரங்கனை தரிசித்த பரவசமே நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது.‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! என்று தொண்டரடிப் பொடியாழ்வார் அடித்துச் சொன்னதில் ஆச்சர்யமென்ன!ஆனால் ஆழ்வார்களின் பக்குவம் நமக்கேது? பணிந்து நின்று சடாரி சாற்றப்பெறும்போதும், துளசி தீர்த்தத்தை அருந்தும்போதும் பதறி பதறி வேண்டிக் கொள்கிறோம்.

பெருந்துயில் வளர் பொன் அரங்கா விழி மலர்ந்தருள் மணிரங்கா!

செந்திருமகிழ்ந்துறை அந்தரங்காவல்

வினைகளைந்தெனை ஆள் அரங்கா!

அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, தடுத்தாட்கொள்ளும் தயை நிதி அல்லவா?

நமது வேண்டுதலைக் கேட்டு, பள்ளி கொண்ட பெருமாள் முன் நிற்கும் உத்ஸவ ரங்கன் சிரிப்பதாகத் தோன்றுகிறது. அவனருகே ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியர்களும் சிரிக்கின்றனர். நமக்குப் பின் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழிவிட்டு நகர்ந்தாலும் அரங்கனை மனக்கண்ணில் படம்பிடித்து, நெஞ்சத் திரையில் நிலை நிறுத்திக்கொள்கிறோம். அவரை இங்கே விட்டுச் சென்ற விபீஷணனும் அதைத்தான் செய்திருப்பான் போலும்!


पल्लवि
रङ्ग नायकं भावये 
रङ्ग नायकी समेतं श्री

अनुपल्लवि
अङ्गज तातं अनन्तं अतीतं
अज-इन्द्र-आदि-अमर नुतं सततं
उत्तुङ्ग विहङ्ग तुरङ्गं 
कृपा-अपाङ्गं रमा-अन्तरङ्गम्

चरणम्
प्रणव-आकार दिव्य विमानं 
प्रह्लाद-आदि भक्त-अभिमानं
गण पति समान विष्वक्सेनं
गज तुरग पदाति सेनम्
दिन मणि कुल भव राघव-आराधनं
मामक विदेह मुक्ति साधनं
मणि-मय सदनं शशि वदनं
फणि पति शयनं पद्म नयनम्
अगणित सु-गुण गण नत विभीषणं
घन-तर कौस्तुभ मणि विभूषणं
गुणि जन कृत वेद पारायणं
गुरु गुह मुदित नारायणम्


ராகம்: 

நாயகி; தாளம்: ஆதி பல்லவி: ரங்கநாயகம் பாவயே ஸ்ரீ ரங்கநாயகி சமேதம் ஸ்ரீ (ரங்க...)

அனுபல்லவி: அங்கஜதாத மனந்தமதீதம் அஜேந்த்ராத்யமரனுதம் ஸததம்

உத்துங்க விஹங்கதுரங்கம் க்ருபாபாங்கம் ரமாந்தரங்கம் ஸ்ரீ (ரங்க...)

சரணம்:

ப்ரணவாகார திவ்யவிமானம் ப்ரஹ்லாதாதி பக்தாபிமானம்

கணபதி ஸமான விஷ்வக்ஸேனம் கஜதுரகபதாதிஸேனம்

தினமணிகுல பவராகவாராதனம் மாமகவிதேஹ முக்திஸாதனம் 

மணிமயஸதனம் சசிவதனம் பணிபதி சயனம் பத்மநயனம்

அகணிதசுகுண கணநதவிபீஷணம் கனதரகௌஸ்துப மணிவிபூஷணம்

குணிஜனக்ருத வேதபாராயணம் குருகுஹமுதித நாராயணம் ஸ்ரீ (ரங்க...)

பொருள்: ரங்கநாயகியுடனான ரங்கநாதரை தியானிக்கிறேன். மன்மதனின் தந்தை; ஆதி - அந்தம் அற்றவன், அனைத்தையும் கடந்தவன்; பிரமன் மற்றும் இந்திராதி தேவர்களால் போற்றப்படுபவன்; கருடனை வாகனமாகக் கொண்டவன்; கருணை நிரம்பிய கண்களையுடையவன்; லக்ஷ்மிக்கு அந்தரங்கமானவன். 

பிரணவாகார விமானத்தை உடையவன். பிரஹலாதன் முதலான பக்தர்களால் வணங்கப்பட்டவன். விநாயகருக்கு ஈடான விஷ்வக்ஸேனரை ஸேனாபதியாய் உடையவன். முப்படைகள் உடையவன். சூரிய குலத் தோன்றலான ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டவன். முக்தியைத் தரவல்லவன். நவரத்தினங்கள் இழைத்த ஆலயத்தில், சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் ஆதிசேஷன் மீது துயில்பவன். தாமரைக் கண்ணன். ஒப்பற்ற குணவானான விபீஷணனால் பூஜிக்கப்பட்டவன். கௌஸ்துப மணியை அணிந்துள்ளவன். வேத பாராயணம் செய்யும் குணவான்களின் இறைவன். குருகுஹனுக்கு மகிழ்வூட்டும் ஸ்ரீமன் நாராயணன்.

                                        திருவரங்க நாயகி…..

                                                பல்லவி

                            திருவரங்க நாயகி உடனிருக்குமரங்கனை

                            திருமாலைக் கேசவனை மனமாரத் துதித்தேன்

                                              அனுபல்லவி

                            கருட வாகனனை திருவுறையும் மார்பனை

                            பிரமன் சுரபதி ரதிபதி வணங்கிடும்

                                                   சரணம்

                            பிரணவாகர விமானமுடையவனை

                            பிரகலாதன் பணிந்த பாதங்களுடையவனை

                            கரிமுகனுக்கீடான சேனை முதலியை

                            முப்படைக்கு தளபதியாய் வைத்திருப்பவனை


                            நவரத்தினம் பதித்த ஆலயத்துறைபவனை

                            பவளவாயனை மதிமுகத்தானை

                            புவனம் போற்றும் கமலக்கண்ணனை

                            சிவகுமரன் குகனை விரும்பும் நாராயணனை     

                                                   

                            தினகரகுலத்துதித்த ஶ்ரீராமன் துதித்தவனை

                            வனமாலை கௌஸ்துபமணிமணி புனைந்தவனை

                            வீடணனுமறையோரும் வணங்கிடும் பதத்தானை

                            ஆதிசேடனின் மீது துயில்பவனை

                                   

எட்டுகுடி முருகனை….

 


                        எட்டுகுடி முருகனை….


                                 பல்லவி

                எட்டுக்குடி முருகனைக் குமரனைத் துதித்தேன்

                கட்டுக்கடங்காத பேரெழில் கொண்ட

                                அனுபல்லவி

                சுட்ட செங்கல் மீது நின்ற கேசவன் மருகனை

                பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் சிவன் மகனை

                                    சரணம்

                துட்ட அரக்கன் சூரனை வதைத்தவனை

                எட்டுகண் நான்முகனை சிறையிலடைத்தவனை

                வட்ட நிலவின் கலையணிந்தவள் மகனை

                மட்டவிழ் மலர்தூவி மலர்ப்பதம் பணிந்து