மகிஷாசுரமர்த்தினி ...
பல்லவி
மகிஷாசுரமர்த்தினி மலர்ப்பதம் பணிந்தேன்
மகிடனை மாய்த்த அன்னையே ஶ்ரீ
அனுபல்லவி
மகா மாயே தேவி பாகவதம் போற்றும்
ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
சரணம்
மகாலக்ஷ்மியும் சரஸ்வதியும் நீயே
மகாதேவன் பிரமன் பணிந்திடும்
மகாதேவி கேசவன் சோதரி
மகிதலம் போற்றும் நவராத்திரி நாயகி
துரிதம்
சுகசனகாதியர் சுரபதி நரர்சுரர்
சந்திரன் சூரியன் அனைவரும் வணங்கிடும்
No comments:
Post a Comment