நீயே பரிந்தருள்....
பல்லவி
நீயே பரிந்தருள் புரிந்திடாவிடில்
தாயே எங்கு செல்வேன் என்செய்வேன்
அனுபல்லவி
மாயே மதுரை வாழ் மீனாக்ஷி
மலையத்வஜ பாண்டியன் சேயே
சரணம்
இம்மாநிலமனைத்தையும் காக்கும்
அம்மா ஜகதீச்வரி எனக்கருளல்
எம்மாத்திரம் உனக்கேனிந்தப் பாராமுகம்
நம்பியந்தன் கழல் பணிந்தேன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment