சரஸ்வதி...
பல்லவி
சரஸ்வதி உன்றன் பதமலர் பணிந்தேன்
கரங்களில் வீணையும் புத்தகமுமேந்தும்
அனுபல்லவி
நரர்சுரர் பிரமன் நாரதரிந்திரன்
அரசரும் முனிவரும் அனைவரும் போற்றும்
சரணம்
நிரந்தரமில்லா பொருள் புகழ் வேண்டேன்
தரம்மிகு கல்வியும் ஞானமும் இசையும்
பயன்தரும் கலைகளும் பணிவும் வேண்டியே
நயமுடன் கேசவன் அனுதினம் துதித்து
No comments:
Post a Comment