அங்கயற்கண்ணி ....
பல்லவி
அங்கயற்கண்ணி மீனாக்ஷி உன்றன்
கடைக்கண்ணருள் வேண்டித் தஞ்சமடைந்தேன்
அனுபல்லவி
திங்களைப் பழிக்கும் மங்கள வதனம்
மங்கையரும் விரும்பும் அங்கசௌந்தர்யம் கொண்ட
சரணம்
சங்கீத வாத்ய கலா விநோதினி
சங்கரன் சோமசுந்தரேச்வரரும் பிரமனும்
அய்ங்கரனும் ஆறுமுகனும் துதித்திடும்
பங்கயமே ஈச்வரி கேசவன் சோதரி
No comments:
Post a Comment