தேவகி மைந்தனை
பல்லவி
தேவகி மைந்தனை மனமாரப் பணிந்தேன்
தேவாதி தேவன் ஶ்ரீவாசுதேவன்
அனுபல்லவி
தேவியர் பாமா ருக்மணியுடன் நிற்கும்
காவளம்பாடிக் கண்ணனைக் கேசவனை
சரணம்
ஆவினங்கள் மேய்க்கும் ஆயர்குலபாலனை
கோவர்த்தனமேந்திக் குவலயம் காத்தவனை
மாவலியை வென்று உலகளந்த வாமனனை
தேவரும் முனிவரும் மூவுலகும் போற்றும்
No comments:
Post a Comment