பரிகாசம்....
பல்லவி
பரிகாசம் ஏனய்யா கேசவா
புரியாதவன் போல் சிலையாக நின்று
அனுபல்லவி
பரிந்தருள் வேண்டிப் பாடிடும் எனையே
தெரியாதவன் போல் பாவனை கொண்டு
சரணம்
தரித்திரன் குசேலன் கேட்காமலே
கருணையுடன் பொருள் அள்ளித் தந்தாய்
கரிராஜன் அழைத்ததும் விரைந்தோடிச் சென்றாய்
சரி நிகரிவருக்கு நானில்லையா
No comments:
Post a Comment