அன்னபூரணி......
பல்லவி
அன்னபூரணி விசாலாட்சி உனைப் பணிந்தேன்
உன்னத கங்கை நதிக்கரையில் வசிக்கும்
அனுபல்லவி
பொன்னும் புகழும் போகமும் வேண்டேன்
உன்னருள் ஒன்றே விரும்பி வேண்டினேன்
சரணம்
முன்னம் ஆதி சங்கரர் துதித்ததும்
அன்னம் பொழிந்த பூரணி உலகெலாம்
இன்னமுதளித்திடும் உமாமகேச்வரி
பன்னக சயனன் கேசவன் சோதரி
ஈசன் காசி விச்வநாதரும்
நேசமுடன் போற்றும் சிவகாமேச்வரி
நீசன் மகிடனை நாசம் செய்த
வாசுகி ஶ்ரீ மகா திரிபுர சுந்தரி
தாளம் : மிச்ர ஜம்பை
No comments:
Post a Comment