ஜய ஜய.........
பல்லவிஜய ஜய ஜய ஶ்ரீ சென்ன கேசவா
பவபயம் நீங்கிட மலர்ப் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
அயனரனிந்திரன் நாரத முனிவரும்
நயமுடன் பணிந்திடும் மாதவா மதுசூதனா
சரணம்
வியக்கச் செய்திடும் எழில் படைத்தவனே
அயர்வின்றி அன்பர்கள் நலம் காப்பவனே
துயரிடர் களைந்திடும் தாமோதரனே
உயர்ந்து மூவடியாலுலகளந்தவனே
No comments:
Post a Comment