புவனேச்வரியாள்....
பல்லவி
புவனேச்வரியாள் மலர்த்தாள் பணிந்தேன்
பவபயம் போக்கிடும் கேசவன் சோதரி
அனுபல்லவி
தவயோக முனிவரும் தேவரும் மூவரும்
நவக்கிரகங்களும் அனுதினம் போற்றும்
சரணம்
நலம் தரும் கல்வியும் ஞானமும் யோகமும்
நிலையான செல்வமும் வளமான வாழ்வும்
உன்னிடம் குறையாத பக்தியும் அடைந்திட
மன்னு புகழ் நெய்வேலி திருத்தலம் வளர்
ராகம்: கீரவாணி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment