ஶ்ரீமகாலக்ஷ்மியுன்....
பல்லவி
ஶ்ரீமகாலக்ஷ்மியுன் மலர்ப் பதம் பணிந்தேன்
பாமரர் பண்டிதர் அனைவரும் துதித்திடும்
துரிதம்
நரர்சுரர் நாரதர் நான்முகனிந்திரன்
சுகசனகாதியர் முனிவர்கள் வணங்கிடும்
அனுபல்லவி
ஶ்ரீமகாவிஷ்ணுவின் மனங்கவர் நாயகி
கோமளவல்லி ஶ்ரீமதி பார்கவி
சரணம்
பூமாலை பொன்மாலை மணிமாலையணிந்து
தாமரை தனிலமர் கேசவன் ப்ரிய சகி
பாமாலை புனைந்துனைப் பாடித் துதித்தேன்
தாமதமின்றியே எந்தனுக் கருள்வாய்
No comments:
Post a Comment