சாமுண்டீஸ்வரி
பல்லவி
சாமுண்டீஸ்வரி உன்னைச் சரணடைந்தேன்
தாமதமின்றியே எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
சாமகானம்தனில் மனம் மயங்கிடும்
தாமரைக்கண்ணழகி நாமநாராயணி
சரணம்
பூமகள் நாமகள் துதித்திடும் அன்னையே
மாமறை போற்றும் சங்கரி புவனேச்வரி
நாமமாயிரம் கொண்ட கேசவன் சோதரி
பாமணி பாயும் பூவனூர் தலம் வளர்
இராகம்: நாமநாராயணி
தாளம் : கண்டதிருபுடை
No comments:
Post a Comment