மாயை
பல்லவி
தூயவனே உந்தன் திருவடி பணிந்தேன்
மாயனே கேசவா மன இருள் அகன்றிட
அனுபல்லவி
நீயே என் துணை நிலையா உலகில்
தாயினும் மேலான தயாபரனே
சரணம்
காயமும் பொய்யென நீயுணர வைத்தாய்
நீயும் நானும் வேறல்ல ஒன்றென்னும்
மாயையை உணர்த்திய சோதியே மெய்ப்பொருளே
நேயமுடன் நினைத்து மனமாரத்துய்த்தேன்
No comments:
Post a Comment