பல்லவி
அனைவரும் நலமுடன் வாழ்ந்திட வேண்டியே
மனமே தினம் துதி கேசவன் நாமம்
அனுபல்லவி
தினையளவு நன்மை பிறர் செய்தாலும்
பனையளவாய்க்கருதி பாராட்டி மகிழ்வுடன்
சரணம்
தனைமட்டுமே நினைந்து நாளும் வீணேகழித்தேன்
வினைப்பயனால் கட்டுண்டு துன்பத்திலுழன்றேன்
இனியேனுமெனைத்திருத்தி நல்வழி காட்டிட
உனையன்றி உற்றதுணை வேறு யாருள்ளார்
No comments:
Post a Comment