பல்லவி
புன்னை மரத்தடியே புல்லாங்குழலூதி நிற்கும்
கண்ணனைக் கண்டு பரவசமடைந்தேன்
அனுபல்லவி
கன்னங்கரிய நிறமென்றாலும் பேரழகன்
தன்னைமறந்து அவனையே நினந்தேன்
சரணம்
கன்னத்தில் விழும் குழி கமலமலர் முகம்
கொண்டையில் மயில்பீலி கழுத்தில் மலர்மாலை
பன்னகசயனனின் கால்களின் தண்டையும்
என்னை மயக்கும் கேசவனின் வடிவழகு
"ராதா மாதவம்" படைப்பிலிருந்து
No comments:
Post a Comment