(பாண்டுரங்கன் )கேசவன்
பல்லவி
பாண்டுரங்க விட்டலனைப் பணிவாய் மனமே
\ வேண்டுவோர் வேண்டும் வரங்களை அருளும்
அனுபல்லவி
காண்பவர் மனங் களைக்களிப்புறச்செய்திடும்
ஆண்டவனவனன்றி வேறு யார் நம் துணை
சரணம்
பாண்டவர் நேசன் பக்த சகாயன்
ஆண்டாள் ருக்மிணி மனங்கவர் கேசவன்
தாண்டவன் சிவனும் தேவரும் பிரமனும்
நீண்டதவம்செயும் முனிவரும் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment