கண்ணனே எந்தன் சென்ன கேசவன்
பல்லவி
சித்திரத்தில் எழுந்தருளிக் காட்சி தரும் கண்ணனை
பக்தியுடன் கண்டு பரவசமடைந்தேன்
அனுபல்லவி
சத்தியமூர்த்தியாய் திருமெய்யம் திருத்தலத்தில்
உத்தமி உய்யவந்தத் தாயுடனிருப்பவனை
சரணம்
பத்மாவதிதன்னை மணம்புரிந்த கேசவனை
எத்திசையும் புகழ் விளங்கும் திருவேங்கடமுடையானை
கத்தும் கடல் நடுவே அரவணையில் பள்ளிகொண்ட
உத்தமபுருஷனை ஸ்ரீமன் நாராயணனை
தித்திக்கும் திருவாயும் கமலமலர் கண்களும்
முத்துப்பல் வரிசையும் மோகனப் புன்னகையும்
முத்துமணி ரத்தினங்கள் பதித்த மாலைகளும்
அத்தனையும் சேர்ந்த நித்திலத் தொத்தினை

No comments:
Post a Comment