திருவாடானை ஆதிரெத்தினேச்வரன்
பல்லவி
நாற்றிசையும் புகழ் விளங்கும் ஆதிரெத்தினேச்வரனை
போற்றித்துதித்தேன் பவ பயம் களைந்தேன்
அனுபல்லவி
காற்று நிலம் நீர் நீள்விசும்பு நெருப்பாகி
ஏற்றமுடன் வாடானைத் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
சரணம்
நேற்றும் இன்றும் நாளையும் நீயே
கூத்தனே உன்னருள் ஒன்றே போதும்
மாற்றெதுவும் உனதடிமை கேசவன் வேண்டேன்
சாற்றிய நீற்றின் பொலிவுடன் திகழும்
No comments:
Post a Comment