தட்சிணாமூர்த்தி
பல்லவி
குருவுக்கு குருவான தக்ஷிணாமூர்த்தியின்
திருவடி பணிந்தேன் அவனருள் பெறவே
அனுபல்லவி
திருக்கரங்களிலே அரவும் அக்னியும்
புத்தகமுமுடுக்கையும் ஏந்திக்காட்சிதரும்
சரணம்
இருள்நீக்கும் கதிரவனாய் முனிவருக்கருளும்
கருணா மூர்த்தி கேசவன் நேசன்
பெரும் பிணி பவபயம் மாயையை அகற்றி
அருட்கரம் நீட்டி ஆதரவளித்திடும் (குருவுக்கு-- )
ஒருநிலைப்படுத்தி மனமுடல் புத்தியை
கருத் துடன் தன்னைத்தானே அறிவோற்கு
இருப்பதும் இல்லா திருப்ப துமவனே
திரு முகம் தென் திசை நோக்கி வீ ற்றிருக்கும்
(குருவுக்கு-- )
நெருப்பு நிலம்நீர் நீள்விசும்பு காற்று
உருவம் அருவம் அனைத்துமவனே
குருவும் சீடனும் ஒருவனே வேறல்ல
இருளும் ஒளியும் மாயையினிருபுறம் (குரு---)
இருவினைப்பயன்களை இல்லாதொழித்திடும்
வருந்துயர் களைந்திடும் ஞானம் நல்கிடும்
தருமநெறி செல்ல உறு துணையாகிடும்
பெரும்பொருளான பேரருளாளன் (குருவுக்கு---)
பல்லவி
குருவுக்கு குருவான தக்ஷிணாமூர்த்தியின்
திருவடி பணிந்தேன் அவனருள் பெறவே
அனுபல்லவி
திருக்கரங்களிலே அரவும் அக்னியும்
புத்தகமுமுடுக்கையும் ஏந்திக்காட்சிதரும்
சரணம்
இருள்நீக்கும் கதிரவனாய் முனிவருக்கருளும்
கருணா மூர்த்தி கேசவன் நேசன்
பெரும் பிணி பவபயம் மாயையை அகற்றி
அருட்கரம் நீட்டி ஆதரவளித்திடும் (குருவுக்கு-- )
ஒருநிலைப்படுத்தி மனமுடல் புத்தியை
கருத் துடன் தன்னைத்தானே அறிவோற்கு
இருப்பதும் இல்லா திருப்ப துமவனே
திரு முகம் தென் திசை நோக்கி வீ ற்றிருக்கும்
(குருவுக்கு-- )
நெருப்பு நிலம்நீர் நீள்விசும்பு காற்று
உருவம் அருவம் அனைத்துமவனே
குருவும் சீடனும் ஒருவனே வேறல்ல
இருளும் ஒளியும் மாயையினிருபுறம் (குரு---)
இருவினைப்பயன்களை இல்லாதொழித்திடும்
வருந்துயர் களைந்திடும் ஞானம் நல்கிடும்
தருமநெறி செல்ல உறு துணையாகிடும்
பெரும்பொருளான பேரருளாளன் (குருவுக்கு---)
No comments:
Post a Comment