கணபதி அக்ரஹாரம் ஸ்ரீமகாகணபதிக்கு சமர்ப்பணம்
பல்லவி
கணபதி உனதிரு கழல் பணிந்தேன்
வணங்கிடும் எனையே காத்தருள்வாயே
அனுபல்லவி
கணங்களும் நந்தியும் தேவரும் முனிவரும்
அணங்குகள் சித்தியும் புத்தியும் பணிந்திடும்
சரணம்
உணவுடை உயிரென அனைத்தையுமளித்திடும்
குணநிதியே குருவே கேசவன் மருகனே
தணலேந்தும் நெற்றிக் கண்ணனின் மைந்தனே
கணநேரமுனை மறவா மனம் தருவாயே
No comments:
Post a Comment