திருவெற்றியூர் பாகம்பிரியாள்
பல்லவி
பாகம்பிரியாளின் பாதகமலங்களை
பற்றி த்துதித்தேன் பரவசமடைந்தேன்
அனுபல்லவி
சேகரன் பங்கிலுறை சங்கரி ஈச்வ ரி
நாகத்தணையான் கேசவன் சோதரி
சரணம்
ஆகம வேத புராணங்கள் போற்றும்
ஏகாம்ரேச்வரி காமாக்ஷி பைரவி
சோகம் களைந்தென் மனஇருள் நீங்கிட
வேகமாய் வந்தெனை ஆண்டருள வேண்டுமென
வன்மீக நாதன் திருவெற்றியுர் சிவன்
பல்லவி
வன்மீக நாதனின் பாதம் பணிந்தேன்
கன்ம வினைப்பயன்கள் தொலைந்திட வேண்டுமென
அனுபல்லவி
தன்னடி தொழுவோர்க்கு இன்னருள் புரிந்திடும்
பன்னகசயனன் கேசவன் நேசன்
சரணம்
பன்னகாபரணன் ஆலமுண்டகண்டன்
இன்னிசை கலைகள் நாட்டியப்பிரியன்
பொன்னெழில் மேனியன் பங்கய பதத்தினன்
மன்னு புகழ் வெற்றியூர் திருத்தலத்துறைபவன்
பல்லவி
பாகம்பிரியாளின் பாதகமலங்களை
பற்றி த்துதித்தேன் பரவசமடைந்தேன்
அனுபல்லவி
சேகரன் பங்கிலுறை சங்கரி ஈச்வ ரி
நாகத்தணையான் கேசவன் சோதரி
சரணம்
ஆகம வேத புராணங்கள் போற்றும்
ஏகாம்ரேச்வரி காமாக்ஷி பைரவி
சோகம் களைந்தென் மனஇருள் நீங்கிட
வேகமாய் வந்தெனை ஆண்டருள வேண்டுமென
வன்மீக நாதன் திருவெற்றியுர் சிவன்
பல்லவி
வன்மீக நாதனின் பாதம் பணிந்தேன்
கன்ம வினைப்பயன்கள் தொலைந்திட வேண்டுமென
அனுபல்லவி
தன்னடி தொழுவோர்க்கு இன்னருள் புரிந்திடும்
பன்னகசயனன் கேசவன் நேசன்
சரணம்
பன்னகாபரணன் ஆலமுண்டகண்டன்
இன்னிசை கலைகள் நாட்டியப்பிரியன்
பொன்னெழில் மேனியன் பங்கய பதத்தினன்
மன்னு புகழ் வெற்றியூர் திருத்தலத்துறைபவன்
No comments:
Post a Comment