மணக்குளவிநாயகன்
பல்லவி
கணபதி நீயே கனிந்தருள் புரிவாய்
இணையடி நிழலே என்றுமெந்தன் துணை
அனுபல்லவி
வணங்கிடுமடியார்க்கு நலங்களை அளித்திடும்
மணக்குளத்தரசே கேசவன் மருகனே
சரணம்
மணம்தரும் மலர்மாலை மணிமாலையணிந்தவனே
பிணியிடர் பவபயம் அனைத்தையும் களைபவனே
பணம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்
குணநிதியே கடைக்கண்ணருளொ ன்றே போதும்
No comments:
Post a Comment