தங்க அன்னபூரணி
பல்லவி
பொன்னன்னபூரணியை மனமாரத்துதித்தேன்
ஒரநாட்டில் எழு ந்தருளி பக்தருக்குக் காட்சிதரும்
அனுபல்லவி
இன்னமுது படைத்திடும் பராசக்தியை
சென்னியில் வைத்து சீரடி போற்றியே
சரணம்
புன்னகையுடனே சங்கும் ஸ்ரீ சக்கரமும்
தன்கையிலேந்தி அடியவர்க்கருளும்
சின்னஞ்சிறு இடையாளை சிவகாமேச்வரியை
தன்னிகரில்லா திரிபுரசுந்தரியை (பொன் ---)
முன்வினைப்பயன்களனைத்தையும் களைபவளை
இன்னலிடர்களை எளிதில் தீர்ப்பவளை
மென்முலையாளை கேசவன் சோதரியை
பொன்மலைதனிலமர் ஸ்ரீ லலிதாம்பிகையை
No comments:
Post a Comment