சங்கும் சக்கரமும்.....
பல்லவி
சங்கும் சக்கரமும் கையிலேந்தி நிற்கும்
வெங்கடேசனை மனமாரப் பணிந்தேன்
துரிதம்
நான்மறை நான்முகன் நாரதர் கருடன்
இந்திரன் சந்திரன் சூரியன் வணங்கிடும்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் திருமலைவாசனை
பத்மாவதி நேசனை ஶ்ரீ நிவாசனை
சரணம்
ஆதிவராகனாயவதரித்தவனை
ஏழுமலையானை கோவிந்தராஜனை
மேதினியோர் போற்றும் கேசவனை மாதவனை
வேதியர் துதிக்கும் வேங்கடமுடையானை