ஆனை முகன்
பல்லவி
கணநாதனைக் காணக் கண் கோடி வேண்டும்
அணங்குகள் சித்தியும் புத்தியும் அருகிருக்கும்
அனுபல்லவி
கணங்களின் அதிபதியை கேசவன் மருகனை
தணலேந்தும் நெற்றிக் கண்ணன் சிவன் மகனை
சரணம்
வணங்கிடுமடியார்க்கு நலமளிப்பவனை
பிணங்கிய குறமகள் வள்ளியை முருகன்
மணந்திட உதவிய ஆனைமுகத்தோனை
இணை யொருவர் தனக்கு இல்லாத தேவனை
No comments:
Post a Comment